நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிள்ளைகளின் சாட்சி தகவல் கசிந்ததால், ஷாராவின் மரண விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது

கோத்தா கினபாலு:

பிள்ளைகளின் சாட்சி தகவல் கசிந்ததால், ஷாராவின் மரண விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

படிவம் 1 மாணவியான ஷாரா கைரினா மகாதீரின் மரணம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிள்ளைகளின் சாட்சி சம்பந்தப்பட்ட தகவல் கசிந்ததைத் தொடர்ந்து இன்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று 10ஆவது நாளாக நடைபெற்று வரும் விசாரணையில் இடையூறு, தாமதத்தை ஏற்படுத்தியது.

இந்த தகவல் கசிவு குறித்து மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் ஹசன் தனது ஏமாற்றத்தை தெரிவித்தார்.

இது பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய எச்சரிக்கை என்றும் நான் நினைக்கிறேன்

ஏனெனில் ஒரு கசிவு அல்லது குறுக்கீடு ஏற்பட்டால், அது நிச்சயமாக விசாரணையின் போக்கைப் பாதிக்கும்.

இன்று இதுதான் நடந்தது. இப்போது,   சில தரப்பினரின் பொறுப்பற்ற செயல்களால் சாட்சிகள் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறார்கள். யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை.

நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன், ஆனால் வேறு வழியில்லை. 

எனவே, இந்த திங்கட்கிழமை விசாரணை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவோம் என்று அவர் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset