நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விவசாயிகள் குறித்த கருத்துக்கு கொலை மிரட்டல்: நடிகை கங்கனா ரணாவத் புகார்

மும்பை:

தில்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி, மும்பை போலீஸில் நடிகை கங்கனா ரணாவத் புகார் அளித்தார்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் கடுமையான கருத்துகள் பதிவிட்டதைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மும்பை போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார்.

பதிண்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர், என்னை கொலை செய்யப் போவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார். இதுபோன்ற அச்சுறுத்தல்களால் நான் பயந்துவிடவில்லை.

நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்களுக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

ஆனால், சுய விளம்பரத்திற்காக கங்கனா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் ஆளும் ப.ஜ.க.வின் பார்வை தம் மீது குவிந்து இருக்க அவர் ஆடும் மற்றோரு நாடகம் இது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset