நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர்:

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரி ஒருவருக்கு பாலியல் சேவைகளை வழங்கியதாக இருவர் மீது இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

29 வயது ஆர்யா மோனுவும் 21 வயது பரத்தும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

இருவரும் குறுகிய கால விசாவுக்கு விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களில் உதவ அவர்கள் கண்ணன் மோரிஸ் எனும் அதிகாரிக்கு பாலியல் சேவைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதியும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியும் குற்றங்கள் நடந்ததாக நம்பப்படுகிறது.

ஆர்யா குற்றத்தை அக்டோபர் 30ஆம் தேதி ஒப்புக்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தார்.

பரத் தாம் குற்றம் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

விசா விண்ணப்பங்களில் உதவுவதற்குப் பரிமாற்றமாக 6 வெளிநாட்டினரிடம் பாலியல் சேவைகளைப் பெற்றதற்காக கண்ணனுக்கு இம்மாதம் 11ஆம் தேதி 22 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆதாரம்: CNA

​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset