நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா வெளியேற விரும்பினால், நேரடியாக தலைவரிடம் பேசுவேன்; தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதை கூற நஜிப்பை சந்திக்கவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதை கூற முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை நாங்கள் சந்திக்கவில்லை.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி எனது தலைமையில் மஇகா தலைவர்கள் குழு டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சந்தித்தது.

இந்த சந்திப்பு வெறும் மரியாதைக்குரிய அறிகுறியே தவிர, தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதற்கான சமிக்ஞை அல்ல.

மஇகா தேசிய முன்னணியை விட்டு வெளியேற விரும்பினால் அந்த விஷயத்தை நஜிப்பிற்கு அல்ல, 

அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடிக்குயிடம் நாங்கள் நேரடியாகத் தெரிவப்போம்.

நான் ஏன் நஜிப்புடன் பேச வேண்டும். நான் தேசிய முன்னணியை விட்டு வெளியேற விரும்பினால், அதன் தலைவருடன் பேச வேண்டும்.

சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற மஇகா மகளிர்களுக்கான அங்கீகார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

நஜீப்புடனான இந்தச் சந்திப்பு தேசிய முன்னணி சமீப காலமாக எடுத்து வரும் திசையில் மஇகா அதிருப்தி அடைந்துள்ளதாக ஊகங்களைத் தூண்டியது.

இருப்பினும் நஜிப்பை சந்திப்பது  வெறும் மரியாதை நிமித்தத்தின் அடிப்படையில் தான் அமைந்திருந்தது.

அவர் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் இந்திய சமூகத்தாலும் மஇகாவாலும் பாராட்டப்படுகிறார் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset