நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரதமர்

புத்ராஜெயா:

சபா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ  10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) மூலம் நேரடியாக வழங்குவதற்காக 10 மில்லியன் ரிங்கிட் உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி சபா அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் தோராயமாக 11 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தடையின்றி சென்றடையும் வகையில் அவர்களுக்கு உதவ மத்திய அரசு இயந்திரங்களை உடனடியாகத் திரட்டவும் அவர் உத்தரவிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, நலன், உயிர்வாழ்வு ஆகியவற்றை உடனடி கவனம் செலுத்தி முடிந்தவரை சிறப்பாகப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக உதவி கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். 

அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு, ஒன்றிணைந்து, ஒட்டுமொத்த மக்களுக்கும் உதவ கருணை மனப்பான்மையை முன்னுரிமைப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset