நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

சுங்கை சிப்புட்:

இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சியான மஇகாவை யாராலும் அழிக்க முடியாது.

அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

இந்திய சமுதாயத்திற்கு மஇகா ஒன்றுமே செய்யவில்லை என்று குறை கூறியே பலர் அரசியல் நடத்தினர்.

ஆனால் அவர்கள் எல்லாம் இப்போது அமைதியாகவும் ஊமையாகியும் விட்டனர்.

ஆக இந்திய சமுதாயத்திற்கு மஇகா ஒன்றும் செய்யவில்லை என இன்னமும் குறை  கூறி அரசியல் நடத்துவதை அனைவரும் நிறுத்தி கொள்ள வேண்டும்.

அதே வேளையில் மஇகாவை யாரும்  மிரட்ட வேண்டாம். எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

இந்திய சமுதாய நலன் கருதி எங்கள் சேவை  திட்டவட்டமாக தொடரும்.

மேலும் தற்போதைய அரசாங்கத்தில் எந்த பிரதிநிதித்துவம் இல்லை என்றாலும் தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கு தமது சேவையை  மஇகாவழங்கி வருகிறது .

தேசிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது மஇகா இந்திய சமுதாயத்திற்கும் பல  தமிழ்ப் பள்ளிகள் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம். 

புதிய பள்ளிகள் சீரமைக்க வழி காண  நடவடிக்கை எடுத்தோம். பல ஏழை  சமுதாய  மறுமலர்ச்சிக்கு பாடுபட்டுள்ளோம்.

உள்நாட்டு பல்கலைகத்தில் போதிய இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் இந்த நாட்டில் இந்திய சமுதாய எதிர்காலத்தில் சிறந்தோரு எதிர்காலத்தை அடைய கல்வியின் முக்கியத்துவத்ததை உணர்ந்து  எதிர்கால நலன கருத்தில  கொண்டு  கெடாவில் ஏய்ம்ஸ்ட்  பல்கலைககழகத்தை  மஇகா அமைத்தது.

இதன் வழி ஆயிரக்கணக்கான  மாணவர்களை பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. 

இதையெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல இந்திய சமுதாய நலனுக்காக பாடுபட்ட மஇகா என்ன செய்தது என பல சாடினர்.

அப்படி  சாடிய ஒரு சில தரப்பினர் இன்று ஆட்சி பீடத்தில் இருந்து எதையும் சுலபமாக செய்ய முடிகிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி தான்.

ஆக மஇகா இந்திய நலனை காக்க கூடிய ஒரே கட்சியாகும். இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது.

மஇகா முன்னாள் மகளிர் செயற்குழு, மஇகா பேரா மாநில ஏற்பாட்டில் நடைபெற்ற  மூத்த மகளிர் ஒன்று கூடும் நிகழ்வு இன்று சுங்கை சிப்புட்  துன் சாமிவேலு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset