
செய்திகள் உலகம்
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
பெய்ஜிங்:
சீனாவில் உணவகத்தின் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழித்த இளையர்கள் 2.2 மில்லியன் யுவான் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் ஷங்ஹாயில் (Shanghai) நடந்தது.
டாங் (Tang), வூ (Wu) என்ற 17 வயது இளையர்கள் Haidilao உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றனர்.
அப்போது அவர்கள் மேசை மேல் ஏறி நின்று பாத்திரத்திற்குள் சிறுநீர் கழித்தனர்.
அதைக் காணொலியாகப் பதிவுசெய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டனர்.
அதற்கு இளையர்கள் கடும் கண்டனத்தை எதிர்நோக்கினர்.
உணவகத்தில் சாப்பிட்ட 4,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று நிறுவனம் கடந்த மார்ச் மாதம் சொன்னது.
பண்ட பாத்திரங்களை மாற்றி உணவகத்தை முழுமையாகச் சுத்தம் செய்ததாகவும் அது தெரிவித்தது.
சம்பவத்தால் ஏற்பட்ட நட்டத்திற்கும் களங்கத்திற்கும் இளையர்கள் இழப்பீடு செலுத்தி பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm