
செய்திகள் மலேசியா
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
கோத்தா கினபாலு:
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 125 குடும்பங்களைச் சேர்ந்த 400 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 126 குடும்பங்களைச் சேர்ந்த 391 பேர் பாதிக்கப்பட்டனர்.
பெனாம்பாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 குடும்பங்களைச் சேர்ந்த 247 ஆகக் குறைந்துள்ளது.
பியூஃபோர்ட்டில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேராக அதிகரித்துள்ளது.
சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
பெனாம்பாங்கில், பாதிக்கப்பட்டவர்கள் மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அதாவது பெனாம்பாங் விளையாட்டு வளாகம் (36 பேர், ஆறு குடும்பங்கள்), திவான் ஹுகுவான் சியாவ் (147 பேர், 49 குடும்பங்கள்), செயிண்ட் பால் கோலோபிஸ் தேசிய பள்ளியில் (64 பேர், 19 குடும்பங்கள்) என அது குறிப்பிட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 5:04 pm
பாஸ் கட்சியின் அழைப்பை மஇகா நிராகரிக்கவில்லை: கேசவன்
September 14, 2025, 5:02 pm
தேசியக் கூட்டணியில் இணைவதற்கு மஇகா முதலில் விண்ணப்பிக்கட்டும்: எம்ஐபிபி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை: புனிதன்
September 14, 2025, 3:28 pm
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி
September 14, 2025, 3:26 pm
செகின்சான் கம்போங் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
September 14, 2025, 3:24 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்: ஃபஹ்மி
September 14, 2025, 3:21 pm
ஆபாச வீடியோ குறித்து சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் மிரட்டல்
September 14, 2025, 2:51 pm