நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆபாச வீடியோ குறித்து சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் மிரட்டல்

ஷாஆலம்:

ஆபாச வீடியோ குறித்து தமக்கும் மிரட்டல் வந்துள்ளதாக  சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

தனது முகத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருத்தப்பட்ட போலி ஆபாச வீடியோவைக் கொண்ட மின்னஞ்சல் மூலம் தமக்கும் மிரட்டல்கள் வந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு இந்த மின்னஞ்சல் வந்தது.

வீடியோ விநியோகிக்கப்படுவதைத் தடுக்க பழிவாங்கும் விதமாக 100,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என மிரட்டப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வகையான அச்சுறுத்தல் மிகவும் கடுமையான குற்றச் செயலாகும்.

மேலும் எனது பாதுகாப்பை அச்சுறுத்துவதற்கும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கும் இது நோக்கமாக உள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

எனவே, மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வகையில் எம்சிஎம்சி, போலிசாரிடம் புகாரை தாக்கல் செய்துள்ளேன் என்று அவர் முகநூல்  அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset