நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

பணம் பறிப்பதற்காக மூன்று கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாச உள்ளடக்கம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைக்கு உதவ போலிசாருக்கு எம்சிஎம்சி உதவும்.

ரபிஸி ரம்லி (பாண்டன்), வோங் சென் (சுபாங்), டாக்டர் தௌஃபிக் ஜோஹாரி (சுங்கை பெட்டானி) ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ பரப்பப்படுவதைத் தடுக்க 100,000 அமெரிக்க டாலத் பணம் செலுத்தக் கோரி தெரியாத ஒருவரிடமிருந்து மின்னஞ்சல்களைப் பெற்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு தற்போது போலிஸ் விசாரணையில் உள்ளது.

எம்சிஎம்சி ஒரு தொழில்நுட்ப நிறுவனமாக உதவும். ஆனால் போலிஸ் முக்கிய நிறுவனம். 

தற்போது எனக்கு வேறு எந்த தகவலும் இல்லைஎன்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset