நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பன்னாட்டு மரபுக் கவிதை மாநாட்டில் பாவலர் முகிலரசன் - டாக்டர் திலகவதி இணையருக்கு விருது

கோலாலம்பூர்:

பன்னாட்டு மரபுக் கவிதை மாநாட்டில் புலவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாவலர் தமிழ்த்திரு முகிலரசனும் அவரது இணையரும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான டாக்டர் திலகவதியும் சிறப்பிக்கப்பட்டனர்.

மரபுக் கவிதையில் ஆளுமையும் அதன் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் பெரும் பங்களித்தவர்களில் ஒருவரான பாவலர் முகிலரசன் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் ஆவார்.

தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் அவ்விருவரும் ஆற்றிய பெரும் பங்கங்கிற்கும் சேவைக்கும் இவ்விருது பெரும் சான்றாகும்.

புலவர் சங்கம் மட்டுமின்றி பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சொந்தக் கட்டிடம் வாங்கிய முந்தைய வரலாற்றிலும் இவ்விருவரின் பங்களிப்பும் செயல்பாடும் காலத்தால் போற்றப்பட வேண்டியது என்றால் மறுப்பதற்கில்லை.

கோலாலம்பூர் கிரிஸ்டன் கிராவுன் தங்குக் விடுதியில் நடைபெற்ற பன்னாட்டு மரபுக் கவிதை மாநாட்டிற்கு முனைவர் குமரவேல் தலைமையேற்ற வேளையில் அம் மாநாட்டை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அவ்விருவருக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணனும் டாக்டர் மனோன்மணிதேவியும்  சிறப்பு செய்து விருது அளித்து போற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset