நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்

லண்டன்:

லண்டனில் வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக வலசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் (Tommy Robinson) ஏற்பாடு செய்த பேரணியில் 150,000 பேர் கலந்து கொண்டனர்.

ராபின்சனின் உண்மையான பெயர் ஸ்டீஃபென் யாக்ஸ்லீ-லென்னன் (Stephen Yaxley-Lennon) என்று தெரிவிக்கப்பட்டது. பேரணியில் பேசிய அவர், உள்ளூர் மக்களைவிடச் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அதிக உரிமை இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

பேரணியில் காணொலி மூலம் தோன்றிய செல்வந்தர் இலோன் மஸ்க் (Elon Musk), கட்டுப்படுத்த முடியாத குடியேற்றத்தைப் பற்றிப் பேசினார். பிரிட்டனில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்றார் அவர்.

வன்முறையில் காவல்துறையைச் சேர்ந்த 26 பேர் காயமுற்றனர். நால்வருக்குக் கடுங்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களில் 25 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இனவாதத்துக்கு எதிராக நடந்த மற்றொரு பேரணியில் 5,000 பேர் கலந்து கொண்டதாக BBC தெரிவித்தது.

ஆதாரம்: BBC

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset