நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய் மொழி நாடகப் போட்டி: தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபாரத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மலாய் மொழி நாடகப் போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபாரத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.

இன்றைய இலக்கவியல் தொழில்நுட்பம் எல்லையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. முன்பு, நாடக நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் மட்டுமே ரசிக்க முடிந்தது.

ஆனால் இன்று, YouTube, TikTok, Instagram போன்ற தளங்கள் மூலம் நாடக நிகழ்ச்சிகளையும் பயிற்சிகளையும் பதிவு செய்து, திருத்தம் செய்து, மலேசியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பகிரலாம். 

இது நம் மாணவர்கள் தங்கள் திறமைகளை உலகளவில் வெளிப்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாகும்.

அதற்கும் மேலாக செயற்கை நுண்ணறிவு மாணவர்களின் படைப்பாற்றல் செயல்முறையில் உதவியாக இருக்க வழி வகுக்கிறது என அமைச்சர்  கோபிந்த் சிங் கூறினார்.

தனபாலன் சின்னையா கீழ் இயங்கும் Persatuan Seni Pentas India Kuala Lumpur அமைப்பின் தேசிய ரீதியிலான மலாய் நாடகப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பரிசுகளை எடுத்து வழங்கினார். 

இந்தப் போட்டி கடந்த 18 ஆண்டுகளாக DEWAN BAHASA & PUSTAKA வோடு இணைந்து நடத்தப்படுகிறது.

கடந்த 18 ஆண்டுகளில் ஒரு முழு அமைச்சர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தனபாலன் பெருமிதம் தெரிவித்தார். 

இந்த வருடம் நாட்டிலுள்ள 80 தமிழ்ப்பள்ளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். 

இந்தப் போட்டியில் ஜொகூர் மாநில பத்து அன்னாம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஐயாயிரம் ரிங்கிட் ரொக்கப் பணமும் சுழற்கிண்ணமும் வென்றனர்.

பேராக சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடமும், ஜாலான் லோபாக் நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த நீலாய் தமிழ்ப்பள்ளி நான்காவது இடமும், பத்துமலை தமிழ்ப்பள்ளிக்கு ஐந்தாவது இடமும் கிடைத்தது.

 வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு ரொக்கப் பணமும், வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. 

நாட்டையே உலுக்கி வரும், பகடிவதைச் சம்பவங்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக, அமைச்சர் முன்னிலையில் அரங்கேறிய ‘BULI’ எனும் நாடகம் வந்தவர்களின் மனதை கலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset