நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான சந்தேக நபருக்கு 6 நாள் தடுப்புக் காவல்

சுங்கைப்பட்டாணி:

2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான சந்தேக நபருக்கு 6 நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டது.

யானில் தாமான் நோனாவில் ஒரு பெண்ணையும் கைத்தொலைபேசி வியாபாரியையும் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புள்ள ஆடவர் கோலத் திரெங்கானு போலிசாரால் கைது செய்யப்பட்டான்.

மேலும் அந்த சந்தேக நபர் விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஆறு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைகளில் உதவுவதற்காக, மாஜிஸ்திரேட் நூர் ஃபஸ்லினா மூசா இன்று முதல் செப்டம்பர் 18 வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

நேற்று காலை 9.45 மணிக்கு கோலத் திரெங்கானுவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடனான 29 வயது ஆணின் உறவின் நிலை குறித்து போலிசார் இன்னும் விசாரித்து வருவதாகவும் யான் மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் ஹமிசி அப்துல்லா தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset