நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரு ஆணுடன் ஆபாச வீடியோவில் இருப்பதாக மிரடட்டல்; 100,000 அமெரிக்க டாலர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ரபிசி

கோலாலம்பூர்:

அடையாளம் தெரியாத மின்னஞ்சல் மூலம் எனக்கு மிரட்டல் வந்ததாக முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி கூறினார்.

 மூலம் தனக்கும் ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஒரு ஆபாச வீடியோ அனுப்பப்படுவதாக மிரட்டல்களைப் பெற்றேன்.

மேலும் இந்த வீடியோவை விநியோகிக்க வேண்டாம் என்றால் அனுப்புநருக்கு 100,000 அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 420,000 ரிங்கிட்) பணம் வழங்க வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.

பணத்தை மாற்றுவதற்காக ஒரு கியூஆர் குறியீட்டைக் கொடுத்துவிட்டு, வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை அவ்வாடவர் வழங்கினார்.

வீடியோவின் ஸ்கிரீன்ஷாட் ஒரு அறையில் படுக்கையில் ஒரு மனிதன் இருப்பது போல் தெரிகிறது.

முந்தைய வீடியோவைப் போலவே மங்கலாக உள்ளன. என் முகம் அதில் இருப்பது போல் தெரிகிறத என்று அவர் இன்று சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் கூறினார்.

அந்த வீடியோ பழைய விவகாரமாக இருக்கலாம்.

எனது மின்னணு சாதனத்தை ஹேக் செய்து பெரிய அவதூறுகளை உருவாக்கும் நோக்கில் மீண்டும் திருத்தப்பட்டதாகவும் தான் நம்புவதாக ரபிசி கூறினார்.

உண்மையில், எனது தொலைபேசி, மடிக்கணினி, பிற பொருட்களை ஹேக் செய்வதற்கான முயற்சிகளை நான் எப்போதும் எதிர்கொள்கிறேன் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset