
செய்திகள் மலேசியா
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி சந்தை கடைகளை எங்களுக்கு கொடுங்கள்: கடைக்காரர்கள் கோரிக்கை
கோலாலம்பூர்:
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி சந்தை கடைகளை எங்களுக்கு கொடுங்கள் என அப்பகுதி கடைக்காரர்கள் கோரிக்கைகை முன்வைத்துள்ளனர்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிக்கு காலம் தொட்டு வியாபாரம் செய்து வருகிறோம்.
வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் சிறுதொழில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் லைசென்ஸ் வழங்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டு காலம் காலமாக வியாபாரம் செய்யும் 40 பேரில் 11 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வியாபாரிகள் மீண்டும் வியாபாரம் செய்ய லைசென்ஸ் வழங்கப்படவில்லை.
இது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் வேதனையும் அளிக்கிறது என்று குணா தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம்.
இது எங்கள் வாழ்வாதாரம். ஆனால் திடீரென்று எங்களை புறக்கணித்து கடைகளை மற்றவர்களுக்கு கொடுத்தது ஏன் என்று இந்திய தொழில் வியாபாரிகள் கேள்வியை எழுப்பினர்.
கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கு நல்ல தீர்வு காண முன் வர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 11:33 pm
பத்துமலை மேல்குகையில் வெள்ளி ரத தேரோட்டம்: விமரிசையாக நடைபெற்றது
September 13, 2025, 10:37 pm
செப்டம்பர் இறுதிக்குள் ரோன் 95 பெட்ரோலின் விலை இன்னும் குறையும்: பிரதமர்
September 13, 2025, 10:35 pm
மலாய் மொழி நாடகப் போட்டி: தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபாரத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது: கோபிந்த் சிங்
September 13, 2025, 10:33 pm
ஒரு ஆணுடன் ஆபாச வீடியோவில் இருப்பதாக மிரடட்டல்; 100,000 அமெரிக்க டாலர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ரபிசி
September 13, 2025, 2:05 pm
மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்
September 13, 2025, 2:03 pm