நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணியில் மஇகா இணைவது குறித்து செய்தி தான் கேள்விப்பட்டேன்; இன்னும் இறுதி செய்யப்படவில்லை: துவான் இப்ராஹிம்

சுங்கைப்பட்டாணி:

தேசியக் கூட்டணியில் மஇகா இணைவது குறித்து செய்தி தான் கேள்விப்பட்டேன். அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் இதனை கூறினார்.

தேசியக் கூட்டணியில்  ஒரு அங்கமாக மஇகா ஏற்றுக் கொள்ளப்படும் என செய்திகள் வந்துக் கொண்டுள்ளன.

இதுவேளை அப்படி சேர்ந்த சுமார் 78,000 உறுப்பினர்களைக் கொண்ட பாஸ் ஆதரவாளர்கள் பேரவையின் நிலை பாதிக்கப்படாது.

கூட்டணியில் சேர ஆர்வமுள்ள எந்தவொரு அரசியல் கட்சி, அரசு சாரா அமைப்பின் பங்கேற்பை வரவேற்பது தேசியக் கூட்டணியின் தற்போதைய நடைமுறையாகும்.

வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஒவ்வொரு பங்கேற்பும் தேசிய முன்னணியின் நிலையை வலுப்படுத்த முடியும்.

மஇகா, தேசிய முன்னணியுடன்  இணைந்தால் பாஸ் ஆதரவாளர்கள் பேரவைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை ஆதரவாளர்கள் பேரவை பாஸ் கட்சி கொண்டிருந்தாலும், இது எங்கள் குழந்தை.

எனவே மஇகா ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்கள் இந்திய சமூகத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய இந்திய மக்கள் கட்சி போன்றே செயல்படுவார்கள்.

எங்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒன்றாக அமர்ந்து விவாதிக்க முடியும்.

இதன் மூலம் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு தேசியக் கூட்டணியின் பெயரில் ஒரு கூட்டு செயல் திட்டத்தை உருவாக்க முடியும்.

 பாஸ் ஆதரவாளர்கள் பேரவையின் மாநாட்டைத் தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset