நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்

மெர்சிங்:

மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

மலேசிய குடிமக்களான பிற இனங்களின் உரிமைகளை மறுக்காமல், மலாய், முஸ்லிம் பெரும்பான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது இந்த நாட்டில் ஒற்றுமை உறுதி செய்யப்படும்.

இதுதான் இவ்வளவு காலமாக நிலைத்து நிற்கும் தேசிய ஒற்றுமையின் அடிப்படையாகும்.

நாம் ஒற்றுமையை உறுதிப்படுத்த விரும்பினால், பெரும்பான்மை மலாய், முஸ்லிம்களைக் கொண்ட இந்த நாடு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். 

ஆனால் இந்த நாடு அனைத்து குடிமக்கள், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக் குடியினர், டயாக், கடாசான் ஆகியோரின் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

27ஆவது ஜொகூர் சாரணர்கள் பொதுச் சபையுடன் இணைந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் கூறினார்.

நாட்டின் தலைவர்கள், எதிர்கால வாரிசுகளாக இளைஞர்களின் பங்கு மிகப் பெரிய பொறுப்பாகும்.

மேலும் அவர்களின் ஒழுக்கம், திறன்களை வளர்ப்பதற்கு போதுமான இடம், பயிற்சி, வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset