நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி நெருங்கி விட்டதால் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், ராஜசேகரன் கோரிக்கை

கோலாலம்பூர்:

தீபாவளி நெருங்கி விட்டதால் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும்.

மலேசிய இந்தியர் பொற்கொல்லர், நகை வணிக சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் இந்த கோரிக்கையை முன் வைத்தனர்.
 
வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தீபாவளி பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

இதனால் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு வேவை செய்ய அந்நியத் தொழிலாளர்களை அரசு விரைந்து கொடுக்க வேண்டும்.

இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு வேவை செய்ய 7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கிய அரசாங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

ஆனால் 30 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு கிடைத்துள்ளன.

சிகை அலங்காரம், நகைக் கடைகள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவை படுகிறார்கள்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் விரைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் Gantian எனப்படும் மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளவும் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் அவர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset