நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா வழக்கின் விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரை அமைதியான கூட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்: வழக்கறிஞர் குழு

கோத்தா கினபாலு:

ஷாரா வழக்கின் விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரை அமைதியான கூட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்

மறைந்த ஷாரா கைரினா மகாதீரின் குடும்பத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது.

முதல் படிவ மாணவி ஷாரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது நடந்து வருகிறது.

ஆக அனைத்து வகையான அமைதியான கூட்டங்களையும் வழக்கின் விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

மறைந்த ஷாராவில் தாயார் நோரைடா லாமத்தின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் கருத்துக்கள் இருப்பதாக வழக்கறிஞர்கள்  குழு தெரிவித்தது.

விசாரணை நடவடிக்கைகள், வழங்கப்பட்ட சான்றுகள் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள், கருத்துகளை வழங்கும்போது அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset