நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கட்டார் மீதான இஸ்ரேல் தாக்குதல்: இலங்கையின் அறிக்கை அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுகிறது: முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சாடல்

கொழும்பு:

கட்டார் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை உட்பட, இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள அனைத்து அறிக்கைகளும் , அதிகாரபூர்வமான கருத்துக்களும் இஸ்ரேலுக்கு அதன் மிலேச்சத்தனத்தையும்,அடாவடித்தனத்தையும்  நீடிக்கவும், அதன்  நீண்டகால ஆக்கிரமிப்பை மேலும் தொடரவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்குள்ள அச்சுறுத்தலை அதிகரிக்கவும் வாய்ப்பான விதத்தில் அரசாங்கத்தினதும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் நீண்டகால இயலாமையை வெளிப்படுத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ,அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கட்டாரை இஸ்ரேல் தாக்கிய சந்தர்ப்பத்தில்,ஈரானில் நடைபெற்ற 50 க்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய பலஸ்தீனம் தொடர்பான உலக இஸ்லாமிய ஒருமைப்பாட்டு மாநாட்டில் கலந்துகொண்டு நான் தெஹ்ரான் நகரில் இருந்தேன்.

அங்கிருந்து நாடு திரும்பும் போதுதான் ,கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள உப்புச் சப்பற்ற அறிக்கையொன்றைக் கண்ணுற்றேன்.

அதன் ஊடாக,ஓர் ஆக்கிரமிக்கும் நாட்டையும் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் நாட்டையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய அளவுக்குக் கூட இந் நாட்டு அரசாங்கம்   திராணியற்றது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதோடு,ஒரு வான்வழித் தாக்குதலுக்கும், வெறும் சம்பவத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு அல்லது அதை விடவும்  மோசமாக, ஒரு கூலிப்படையின்  நடத்தைக்கும்,அதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்களின் மத்தியில் இயல்பாகக் காணப்படும் ஒருமைப்பாட்டிற்கும் இடையிலான உணர்வுபூர்வமான தன்மையைக் கூட அரசாங்கம் கண்டுகொள்ளாது இருப்பதை அறிந்து கொண்டேன்.

நெதன்யாகு அரசாங்கத்தின் கொஞ்சம் கூட மனசாட்சியற்ற மற்றும் கீழ்த்தரமான அத்துமீறல்கள், மனிதநேயம் கண்ணியம், சர்வதேச சட்டத்தின் விழுமியங்கள், பிற நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை மீறும் போது இலங்கை அரசாங்கத்தின்  வெறுமனே புதினம் பார்த்துக் கொண்டிருக்கும் வெறிச்சோடித்தனம், அறவே பொறுப்புணர்ச்சியற்ற தன்மை மற்றும் கொடூரமான குற்றங்கள் தோய்ந்த கலாசாரத்தின் ஆழ, அகலத்தையும் இது அம்பலப்படுத்தியுள்ளது. 

உணர்வுகளை எவ்வாறு பகிர்ந்து கொண்டது என்பதைப் பற்றிப் பேசவோ கூட துணிவதில்லை என்பது ஒரு வேதனையான உண்மையாகும்.

இஸ்ரேலின் கடுமையான அத்துமீறல்களை வெறும் சம்பவங்கள் அல்லது தாக்குதல்கள் என்று  வெறுமனே பட்டும் படாமலும் அழைப்பதன் மூலம், "இஸ்ரேல் தான் இதைச் செய்தது" என்று துணிச்சலான கருத்துக்களை திட்டவட்டமாக முன்வைக்க முடியாமல் , அரசாங்கத்தையும்,வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சையும் அவ்வாறு செய்ய விடாமல் தடுப்பது யார்? 

இந்த நிலைமை நீடித்தால் ,இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை பொறிமுறை வெறும் கேலிக் கூத்தாக மாறுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும் என்றுள்ளது.

ஏ. ஆர். ஏ. ஹஃபீஸ்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset