நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கலவரங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட 7 பேர் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்: போலிஸ்

கோலாலம்பூர்:

கலவரங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட 7 பேர் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் இதனை கூறினார்.

கம்போங் சுங்கை பாருவில் நடந்த ஒரு சம்பவத்தில் கலவரம், குழப்பம், மூத்த போலிஸ் அதிகாரியை காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் ஒரு அரசு சாரா அமைப்பின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது.

அவர்களில் ஒருவர் அந்த அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களின் நோக்கங்களையும் தனது துறை இன்னும் அடையாளம் கண்டு வருவதாக அவர் கூறினார்.

குடியிருப்பு வெளியேற்றும் பணியின் போது கலவரம், குழப்பத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர்,

ஒரு அமைப்பின் தலைவரையும் அதன் உறுப்பினர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

மேலும் இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதால், அவர்கள் எவ்வாறு ஈடுபட்டார்கள்.

இந்த மோதல் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டதா அல்லது அவர்களுக்கு வேறு திட்டங்கள் உள்ளதா என்பது விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset