நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் கட்சி அரசாங்கத்தில் இருந்தபோதுதான் கம்போங் சுங்கை பாரு விவகாரம் நடந்தது: ரபிசி குற்றச்சாட்டு

கோலாலம்பூர்:

கம்போங் சுங்கை பாரு வெளியேற்றப் பிரச்சினையில் பாஸ் சவாரி செய்ததற்காக முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி பாஸ் மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இஸ்லாமியக் கட்சி அரசாங்கத்தில் இருந்தபோது இந்த விஷயம் நடந்தது என்பதை அவர் நினைவூட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினை நீதிமன்றங்களை அடைவதற்கு முன்பே, அப்போதைய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பெர்சத்துவைச் சேர்ந்த ரினா ஹருண் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தோல்வியடைந்தது தேசியக் கூட்டணியே. காரணம்  இது அவர்களின் நிர்வாகத்தின் போதுதான் நடந்தது. 

அவர்களால் சிறந்த விதிமுறைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை அல்லது போதுமான அளவு முயற்சி செய்யவில்லை.

முதலில் யார் இதைத் தொடங்கினர் என்பது போன்ற விஷயங்களை நாம் பின்னோக்கிப் பார்க்க விரும்பினால், அது பின்னர் மோசமாகிவிடும்.

அது அம்னோ அரசாங்கத்துடன் தொடங்கியது என்று  ரபிசி கூறினார்.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset