நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னரை அவமதித்த ஆடவர் கைது; போதைப்பொருள் உட்பட பல குற்றப் பதிவுகளை அவர் கொண்டுள்ளார்: போலிஸ்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னரை அவமதித்த ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

அவ்வாடவர் போதைப்பொருள் உட்பட பல குற்றப் பதிவுகளை கொண்டுள்ளார் என்று புக்கிட் அமான் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர டத்தோ குமார் கூறினார்.

@muhammad.bin.abdu969 என்ற கணக்கு மூலம் டிக்டோக்கில் பரவிய காணொளியில் மாமன்னர், மலாய் ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் தேசத்துரோகக் கூறுகள் இடம் பெற்றிருந்தன.

இது தொடர்பான விசாரணைக்கு உதவ, உள்ளூர் ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

41 வயதான அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒரு போதைப்பொருள் வழக்கு, மூன்று குற்ற வழக்குகள் உட்பட இரண்டு குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று செப்டம்பர் 12ஆம் தேதி புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு டி5, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை மூலம் @muhammad.bin.abdu969 என்ற டிக்டாக்கில் வீடியோ பரிமாற்றம் தொடர்பான வழக்கு குறித்து https://www.tiktok.com/@muhammad.bin.abdu969 என்ற இணைப்பின் மூலம் விசாரணை நடத்தியதாக அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset