நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்

சிங்கப்பூர்:

ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கட்டடத்தின் வெளியே உள்ள ஒரு மேற்கூரை விழுந்துவிட்டது.

அது பெரும் சத்தத்துடன் விழுந்ததாகச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர்.

இன்று (12 செப்டம்பர்) மாலை சுமார் 4 மணி அளவில் சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

Liat Towers கட்டடத்தில் உள்ள Starbucks கடைக்கும் Swirl Lover கடைக்கும் இடையே உள்ள வெளிப்புற இடம் தற்போது மூடப்பட்டுள்ளது.

கூரை விழுந்ததில் கர்ப்பிணி ஒருவர் காயமுற்றதாகச் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் 'தெரிவித்தனர்.

கூரையின் கீழ் சிலர் சிக்கிக்கொண்டதாகவும் வழிப்போக்கர்கள் அவர்களை மீட்க உதவியதாகவும் அவர்கள் பகிர்ந்தனர்.

சம்பவம் தொடர்பில் 'செய்தி' கட்டட, கட்டுமான ஆணையத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset