
செய்திகள் உலகம்
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
டோக்கியோ:
ஜப்பானில் 100 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அவர்களில் சுமார் 88 விழுக்காட்டினர் பெண்கள்.
தற்போது 100 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கை குறைந்தது 99,800ஆக இருக்கிறது.
இது கடந்த ஆண்டைவிட சுமார் 5 விழுக்காடு, அதாவது சுமார் 4,600 அதிகம்.
ஜப்பானில் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 80 பேர் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்.
தற்போது ஜப்பானில் ஆக வயதானவர் ஷிகேகோ ககாவா (Shigeko Kagawa) என்கிற பெண்.
அவருக்கு வயது 114.
அவர் சுமார் 80 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியவர்.
உலகளவில் ஆக வயதானவர் 116 வயது எதல் கேடர்ஹாம் (Ethel Caterham). அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்.
ஜப்பானில் சரியும் மக்கள்தொகையும் அதிகரிக்கும் மூத்தோரின் எண்ணிக்கையும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும் வேளையில் அதை ஈடுகட்டுவதற்குத் தேவையான ஊழியர் அணி சுருங்குகிறது.
சென்ற ஆண்டு மக்கள்தொகையில் ஜப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 900,000 குறைந்தது.
மக்கள்தொகைச் சரிவைக் கையாள அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஏதும் பெரிய அளவில் உதவவில்லை.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm
நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்
September 11, 2025, 12:42 pm
டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிர்க் படுகொலை
September 10, 2025, 5:04 pm
நேப்பாளத்தில் இருக்கும் சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்
September 10, 2025, 4:57 pm