நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்

புது டெல்லி: 

கத்தார் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

சிரியா, ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், காஸா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கத்தார் தலைநகர் தோஹாவிற்கு வந்திருந்த ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் அஹ்மது அல் தானியிடம் தொலைபேசி வாயிலாக பேசினேன். அப்போது கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல் வேதனையளிப்பதாக தெரிவித்தேன்.
இது கத்தாரின் இறையாண்மைக்கு எதிரான செயல். இதற்கு இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா ஆதரவளிக்கிறது என குறிப்பிட்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset