நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எந்த முக்கிய பிரமுகரும் எனது சாட்சியத்தை தடுக்க முயற்சிக்கவில்லை: டாக்டர் ஜெஸ்ஸி ஹியு

கோத்தா கினபாலு:

ஷாரா வழக்கில் எந்த முக்கிய பிரமுகரும் எனது சாட்சியத்தை தடுக்க முயற்சிக்கவில்லை.

குயின் எலிசபெத் மருத்துவமனை நோயியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியு இதனை கூறினார்.

மரண விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதில் எந்த விஐபிக்களோ அல்லது மூன்றாம் தரப்பினரோ தன்னை தடுக்க முயற்சிப்பது பற்றி தனக்குத் தெரியாது.

மறைந்த ஷாரா கைரினாவின் மரணம் குறித்த விசாரணைக்கான அவரது பதில்கள் அவரது நிபுணத்துவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவையா, 

விஐபிக்கள் அல்லது மூன்றாம் தரப்பினரால் பாதிக்கப்படவில்லையா என்று வழக்கறிஞர் டத்தோ ராம் சிங் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

இந்த வழக்கில் யாரும் என்னை தடுக்கவில்லை. அது குறித்தும் எனக்கு தெரியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset