நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமருக்கு கொலை மிரட்டல்: புக்கிட் அமான் முழுமையாக விசாரிக்கும்

கோலாலம்பூர்:

பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் தொடர்பில் புக்கிட் அமான் முழுமையாக  விசாரிக்கும்.

டாங் வாங்கி போலிஸ்படையின் துணைத் தலைவர் நூசுலான் முஹம்மத் டின் இதனை கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள கம்போங் சுங்கை பாருவில் வெளியேற்ற நடவடிக்கையின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இச் சம்பவத்தை காட்டும்  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதன் அடிப்படையில் கெஅடிலான் இளைஞர் பிரிவு இரண்டு போலிஸ் புகார்களை பதிவு செய்துள்ளது.

கோலாலம்பூர், சிலாங்கூர் இளைஞர் பிரிவு நேற்று இரவு 8 மணியளவில் டாங் வாங்கி போலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக கோலாலம்பூர் தகவல் தலைவர் முஹம்மது ரைஸ் ஹம்தா தெரிவித்தார்.

மேலும் விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு குற்றவாளிகள் மீது போலிஸ் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

இதனிடையே இது தொடர்பில் போலிஸ் புகார் கிடைத்ததை உறுதிப்படுத்திய நூசுலான் முஹம்மத் டின்,

இந்த வழக்கை புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும் என்றும் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset