நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் சுல்தானா அமினா மருத்துவமனை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது

ஜொகூர்பாரு:

ஜொகூர் சுல்தானா அமினா மருத்துவமனை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

நேற்று நண்பகல் முதல் தொடர்ந்து கனமழை பெய்ததால் சுல்தானா அமினா மருத்துவமனை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சமூக ஊடக பயனர்களால் பகிரப்பட்ட நான்கு நிமிட 25 வினாடிகள் கொண்ட காணொலியின் அடிப்படையில், 

மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை பொருட்கள், உபகரணங்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களை அகற்ற முயற்சிக்கின்றனர்.

மாலை சுமார் 6.00 மணியளவில் லில்லி கட்டிடப் பகுதியை திடீர் வெள்ளம் சூழத் தொடங்கியதாக அறியப்படுகிறது.

சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்வதாக மாநில சுகாதாரம்,  சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset