
செய்திகள் மலேசியா
நெகிழியிலிருந்து விடுபடுவோம்: அழைப்பு விடுக்கும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
பினாங்கு:
நெகிழியிலிருந்து வெளியேரும் நச்சுக்களின் அபாயங்களிலிருந்து விடுபட அனைவரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையை உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள பசுமை புரட்சி வாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என பி.ப.சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பசுமை புரட்சி என்பது உலகின் அனைத்து பகுதிகளிலும் நிலையான பயனீட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய பிரச்சாரமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடைபெறுகிறது இந்த பசுமை புரட்சி வாரம்.
இந்த அடிபடையில் இந்த ஆண்டின் பசுமை பிரச்சாரத்தில் வளங்களைப் பகிர்ந்து கொள்வதையும் அணுகுவதையும் எளிதாக்குவதன் மூலம் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் காட்ட அனைவரையும் அழைக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.
பகிர்வு சமூகத்தை வளர்ப்பதோடு நிலையான வாழ்க்கை குறித்த கூட்டங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலம் - அனைவருக்கும் சமூக நன்மைகளை உருவாக்கும் அதே வேளையில், கிரகத்தில் நாம் ஏற்படுத்தும் எதிர்மறை தாக்கத்தைக் குறைக்க ஒத்துழைப்பு மற்றும் கவனமுள்ள பயனீட்டு பிரச்சாரம் ஊக்குவிக்கப்படுகின்றது என்றார் பி.ப.சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர்.
பசுமை நடவடிக்கை வாரம் 2025ல் இணைந்து, பகிர்வு சமூகம் என்ற கருத்தை வெளிப்படுத்த, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்த ஆண்டுக்கான கருப்பொருளான "நெகிழியில் உள்ள நச்சுகள் - நெகிழியிலிருந்து விடுபடுவது எப்படி?" என்பதை தொட்டு பிரச்சாரத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது என்றார் முஹைதீன்.
நாம் சுவாசிக்கும் காற்றிலும், நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலும், நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் நம் அன்றாட வாழ்வில் நுண்ணியல் நெகிழி காணப்படுகிறது.
நெகிழி பொருட்கள் நவீன வாழ்க்கையின் அத்தியாவசிய கூறுகளாக மாறிவிட்டன.
இருப்பினும், நெகிழி ஒரு செயலற்ற பொருள் அல்ல, அது நச்சுத்தன்மையற்றது அல்ல - அதில் உள்ள இரசாயனங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றார் அவர்.
நெகிழி முற்றிலும் பாதுகாப்பானது என்ற கருத்து தவறானது.
நெகிழியைப் பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது.
ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமைகளை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம்.
மக்காத நெகிழிப் பொருட்கள் விவசாய நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது.
நெகிழிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை களின் மூலம் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை கொண்டது.
இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நெகிழி பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 1000-ம் ஆண்டுகள். எனவே நெகிழி பைகள் போன்றவற்றை வாங்கக் கூடாது.
நம் உடல் நலத்தையும், எதிர்கால சந்ததியினர் நலத்தையும் கருத்தில் கொண்டு இனியாவது நெகிழிப் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து வளமான, நலமான நோயற்ற சமூகத்திற்கு துணை நிற்போம் என்று முஹைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 11, 2025, 6:29 pm
இங்கிலாந்தில் சொத்து இருப்பது குறித்து எனக்கு தெரியாது: துன் மகாதீர்
September 11, 2025, 6:04 pm
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கம்போங் சுங்கை பாருவில் 37 வீடுகள் காலி செய்யப்பட்டன: போலிஸ்
September 11, 2025, 5:27 pm
மலேசியாவில் மின்-சிகரெட் கட்டங்கட்டமாகத் தடை செய்யப்படும்: சுகாதார அமைச்சர் ஸுல் கிஃப்லி
September 11, 2025, 4:19 pm
ஜொகூரில் மின்-சிகரெட்டு வாங்குவோரில் சிங்கப்பூரர்களே அதிகம்
September 11, 2025, 4:06 pm
நீதிபதி பதவி விலகக் கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது
September 11, 2025, 3:51 pm
டாங் வாங்கி போலிஸ் தலைவரை காயப்படுத்தியது ஒரு இழிவான, கண்டிக்கத்தக்க செயலாகும்: அன்வார்
September 11, 2025, 2:02 pm