நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இங்கிலாந்தில் சொத்து இருப்பது குறித்து எனக்கு தெரியாது: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

இங்கிலாந்தில் சொத்து இருப்பது குறித்து எனக்கு தெரியாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

இங்கிலாந்தில் சொத்துக்கள் இருப்பது குறித்து எனக்குத் தெரியாது.

அவை தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சொத்துக்கள் குறித்து டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் அறிக்கை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்  கூறினார்.

வெளிப்படையாக எனக்கு இங்கிலாந்தில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எனக்குத் தெரியாது.

இது உண்மையாக இருந்தால் இந்தச் சொத்தை நான் உரிமை கோர முடியும்.

அதனால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். அதைப் பெற்ற பிறகு பல ஏழைகளுக்குக் கொடுப்பேன் என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset