நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்புக்கு நெருக்கமான சார்லி கிர்க் படுகொலை

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புக்கு (Donald Trump) மிகவும் நெருக்கமான சார்லி கிர்க் (Charlie Kirk) சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் ஓரெம் (Orem) நகரில் உள்ள யூட்டா வேலி (Utah Valley) பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சுடப்பட்டார். ஒற்றைத் தோட்டா அவரது கழுத்தில் பாய்ந்தது.

உலகெங்கும் இந்தப் படுகொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூட்டா மாநிலத்தின் ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் (Spencer Cox) இது ஓர் அரசியல் படுகொலை என்று குறிப்பிட்டார்.

திரு கிர்க் சுடப்பட்டதும் பெரிய அளவில் கூடியிருந்த மாணவர்கள் சிதறி ஓடியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.  இதுவரை சந்தேக நபர் பிடிபடவில்லை.

விசாரணை தொடர்வதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
 
ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset