நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கத்தாரைத் தாக்கிய இஸ்ரேல்: கண்டித்தது சிங்கப்பூர்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு (MFA) டோஹா மீது இஸ்ரேல், நடத்திய தாக்குதல் கத்தாரின் அரசுரிமையை மீறிய "அதிர்ச்சியூட்டும், ஆபத்தான செயல்" என்று கூறியிருக்கிறது.

காஸா சண்டைநிறுத்தம், பிணையாளிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தையைக் கீழறுத்தும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சொன்னார்.

சிங்கப்பூர் கத்தாருடன் தோளோடு தோள் கொடுத்து நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் கத்தார் தலைநகர் டோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தியது.

அந்தத் தாக்குதல் 'கோழைத்தனமானது' என்றும் அது அனைத்துலகச் சட்டத்தை மீறிய செயல் என்றும் கத்தார் சாடியது.

ஆதாரம் : CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset