நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புதிய சுகாதார அமைச்சர் மயங்கி விழுந்தார்: சுவீடனில் சம்பவம் 

ஸ்டாக்ஹோம்: 

சுவீடனின் புதிய சுகாதார அமைச்சராக மேடையில் அறிமுகம் செய்யப்பட்ட சில விநாடியில் எலிசபெத் லான் (Elisabet Lann) மயங்கி விழுந்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது அந்தச் சம்பவம் நடந்தது.

லான் அறையிலிருந்து உடனடியாக வெளியே கொண்டுசெல்லப்பட்டார்.

ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு அவர் செய்தியாளர் சந்திப்பிற்குச் திரும்பினார்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயங்கி விழுந்துவிட்டதாக அவர் சொன்னார். உடனடியாக அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அவர் மேடையில் விழும் காணொலி சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.

சுவீடனின் முன்னாள் சுகாதார அமைச்சர் பதவி விலகிய பிறகு  லான் அந்தப் பொறுப்புக்கு வந்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset