நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும்: சுஹாகாம்

கோலாலம்பூர்:

சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

சுஹாகாம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.

 சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக நான்கு மலேசியர்களுக்கு மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.

அவர்களின் மரணத் தண்டனையை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

கே. தட்சிணாமூர்த்தி, பி. பன்னீர் செல்வம், எஸ். சாமிநாதன், ஆர். லிங்கேஸ்வரன் ஆகிய நான்கு பேர் இத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

சுஹாகாம் மரண தண்டனைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

அனைத்து குற்றவாளிகளுக்கும் நீதி, கண்ணியம், மறுவாழ்வு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறியது.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனையை அனுமதிக்கும்.

அதே வேளையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அந்த வகைக்குள் வராது என்று ஐ.நா மனித உரிமைகள் குழு தொடர்ந்து தீர்ப்பளித்து வருகிறது.

எனவே, வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் மலேசியர்களின் உரிமைகள், உயிர்களைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான இராஜதந்திர, சட்ட நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset