நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ மொஹைதினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது: டான்ஸ்ரீ அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் மருமகன் மேற்காசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

தொழிலதிபரான டத்தோஸ்ரீ முகமது அட்லான் பெர்ஹான் மேற்கு ஆசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நாட்டை எங்களால் வெளியிட முடியாது.

ஆனால் அந்த நாடு மலேசியாவுடன் ஒரு ஒப்படைப்பு ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.

அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

எம்ஏசிசி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவரது கடப்பிதழை ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம் என அவர் கூறினார்.

- பார்ததிபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset