நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முழு ஆதரவை தர வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

பெர்சத்து தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும்
முழு ஆதரவை வழங்க வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து  சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

பெர்சத்து கட்சியின் பேராளர் மாநாடு அண்மையில் நடைபெற்று முடிந்தது.

இம்மாநாட்டில் எழுந்த ஒரு சில சர்ச்சைகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இறுதி நாளில் நாட்டின் 11ஆவது பிரதமரான டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் பெயரை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றியது.

அதே வேளையில் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தலைமைத்துவத்தை அனைவரும் ஆதரித்தனர்.

இதன் அடிப்படையில் பெர்சத்து கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் ஆகியோருக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்.

இனி கட்சிகளில் பிளவுகளை தவிர்த்து விட்டு கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக சவால்மிக்க அடுத்த பொதுத் தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset