நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் உத்தரவிட்டார்: ஃபஹ்மி

புத்ராஜெயா:

அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.

தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், 47ஆவது ஆசியான் உச்ச நிலைமாநாட்டிற்கான ஏற்பாடுகளில் முழு கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.

இதனால் அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்த அவர்  உத்தரவிட்டார்.

உடனடியாக அமலுக்கு வரும் இந்த உத்தரவு, திட்டமிடப்பட்ட கூட்டங்கள் அல்லது அமைச்சரவையால் சிறப்புக் கருத்தில் கொள்ளப்படும் விஷயங்களை விலக்குகிறது.

இது, அமைச்சர்கள் பல திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்கிறது.

மேலும் அக்டோபர் 10 ஆம் தேதி பிரதமரால் தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்டுக்கான தயாரிப்புகளையும் உறுதி செய்யும்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset