நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தம்பூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0: விமரிசையாக நடைபெற்றது

ஈப்போ:

தம்பூன் கன்னூர் மகா மாரியம்மன் ஆலயத்தில் கந்தர் விழா 8.0 மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

கந்தர் விழா இயக்கத்தின் சார்பில் 8ஆவது முறையாக இவ்விழா நடைபெற்றது.

டாக்டர் ஷான், மோகன், ஆதிலட்சுமி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இவ்விழா நடைபெற்றது.

காலை 8 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்த குரலுடன் 108 வேல் போற்றி, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாடினர்.

குறிப்பாக மலேசிய ஆதிசங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திரா   கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset