நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது: ஃபஹ்மி

புத்ராஜெயா:

சட்டத்துறை தலைவர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டது.

தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

பிரதமர் துறையின் (சட்டம், நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான் இந்த விவகாரம் தொடர்பான பல மாதிரிகளை வழங்கியதைத் தொடர்ந்து, 

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இன்று அமைச்சரவை மிகவும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

இதில் சட்டத்துறை தலைவர், அரசு வழக்கறிஞர் ஆகியோரின் அதிகாரங்களை முற்றிலுமாக பிரிக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.

முழுமையான பரிசீலனைக்குப் பிறகு, இந்த இரண்டு பதவிகளும் கூட்டரசு அரசியலமைப்பில் தனித்தனியாகவும் சமமாகவும் உருவாக்கப்பட்ட முழுமையான பிரிப்புக்கான திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset