நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் நேபாள முன்னாள் பிரதமரின் மனைவி உயிரிழந்தார்

காத்மண்டு: 

நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.

நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. 

சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த கலவரத்தின் போது காத்மண்டுவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம், அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், நினைவுச் சின்னங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இந்த சூழலில் டல்லுவில் உள்ள நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் அவரை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக, சமூக வலை​தளங்​கள் மீதான தடையை விலக்க கோரி​யும், நாட்​டில் பரவி​யுள்ள ஊழல் கலாச்​சா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்கக் கோரியும் நேற்று ஆயிரக்​கணக்​கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்​மாண்​டு​வில் பேரணி நடத்தினர். அப்​போது, நாடாளு​மன்​றத்​துக்கு வெளியே போடப்​பட்​டிருந்த தடுப்​பு​களை தாண்டி உள்ளே நுழைய போ​ராட்​டக்​காரர்​கள் முயன்​றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்​டின் மீதும் கற்​களை வீசி தாக்​குதல் நடத்​தினர்.
 
இதையடுத்​து,போ​ராட்​டக்​காரர்​களுக்​கும் பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே மோதல் மூண்​டது.

பாதுகாப்பு படை​யினர் கண்​ணீர் புகை குண்​டு​களை வீசி​யும், ரப்​பர் தோட்​டாக்​களால் சுட்​டும், தண்​ணீரை பீய்ச்​சி​யடித்​தும் போ​ராட்​டக்​காரர்​களை கலைக்க முயன்​றனர். இதுவரை இந்த கடும் மோதலில் 22 பேர் உயி​ரிழந்​துள்ளனர். 500-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset