நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் வர்த்தக போருக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் சீனா அழைப்பு

பெய்ஜிங்: 

அமெரிக்காவின் வரிப் போருக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்.

பிரேஸில் அதிபர் லூலா டசில்வா தலைமையில் ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.

இதில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், ஒரு சில நாடுகளால் நடத்தப்படும் வர்த்தக மற்றும் வரிப் போர்கள் உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, சர்வதேச வர்த்தக விதிகளைப் பலவீனப்படுத்துகின்றன.

தெற்குலக நாடுகளின் முன்னணி அமைப்பான பிரிக்ஸ், வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, பரஸ்பர வெற்றிக்கான ஒத்துழைப்பு, பலதரப்புவாதம் ஆகியவற்றை இணைந்து பாதுகாக்க வேண்டும்.

பிரிக்ஸ் நாடுகள் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயல்படுகிறோமோ, அந்தளவுக்கு நெகிழ்வாகவும், வளங்கள் நிறைந்ததாகவும், வெளிப்புற அபாயங்களையும் சவால்களையும் சமாளிப்பதில் திறமையாகவும் இருக்க வேண்டும். இதனால் இந்த நாட்டு  மக்களுக்கு அதிக பயன்கள் கிடைக்கும் என்றார்.

மாநாட்டில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset