
செய்திகள் உலகம்
காத்மாண்டு விமான நிலையம் மூடல்: ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விமான சேவைகள் நிறுத்தம்
புதுடெல்லி:
நேபாளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், அந் நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தீவிரமடைந்தது. சமூக ஊடக தடைக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றதோடு, அரசாங்கத்துக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி இன்று பிற்பகல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நேபாள தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் காத்மாண்டுவுக்கான தங்கள் சேவைகளை ரத்து செய்தன.
போராட்டக்காரர்களால் ஏற்பட்ட தீயினால் உருவான புகை மூட்டத்தால், காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, "காத்மாண்டுவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெல்லி - காத்மாண்டு - டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் AI2231/2232, AI2219/2220, AI217/218, AI211/212 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று இண்டிகோ தனது அறிக்கையில், "காத்மாண்டுவிற்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்கள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காத்மாண்டுக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm
கத்தார் தாக்குதல் இஸ்ரேலுக்கு இந்தியா கண்டனம்
September 11, 2025, 5:20 pm
விசா விண்ணப்பித்தவர்களிடம் பாலியல் சேவை பெற்ற ICA அதிகாரிக்கு 22 மாதச் சிறை
September 11, 2025, 3:46 pm