நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேப்பாளத்தில் சமூக ஊடகத் தடை: ஆர்ப்பாட்டங்களில் 19 பேர் மரணம்

காட்மாண்டு: 

நேப்பாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

சென்ற வெள்ளிக்கிழமை (5 செப்டம்பர்) Facebook, YouTube, X உட்பட சில தளங்களை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்தது.

அதை எதிர்த்து காட்மாண்டு நகரிலும் நேப்பாளத்தின் மேலும் சில பகுதிகளிலும் இளையர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

அரசாங்கத்தில் ஊழலைக் கையாள வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

நாடாளுமன்றத்திற்கு அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு சிலர் அத்துமீற முயன்றனர்.

அவர்கள் மீது ரப்பர் தோட்டா, கண்ணீர்ப் புகை, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனம் ஆகியவற்றைக் காவல்துறையினர் பயன்படுத்தினர்.

காவல்துறையினர் சுமார் 100 பேர் உட்பட கிட்டத்தட்ட 400 பேர் காயமுற்றதாகக் காட்மாண்டு காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

சென்ற மாதம் பாதிக்கப்பட்ட சமூக ஊடகத் தளங்கள் நேப்பாளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அதற்கு 7 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. நிறுவனத்தைத் தொடர்புகொள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

பதிவு செய்யாத 26 தளங்கள் தடை செய்யப்பட்டன.

ஆதாரம் : AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset