
செய்திகள் மலேசியா
டுரியான் துங்கால் செமாபோக் பெர்டானா பாலர்பள்ளியில் சுதந்திர தினப் பேரணி
மலாக்கா:
நாட்டின் 68ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு டுரியான் துங்கால் செமாபோக் பெர்டானா பாலர்பள்ளியில் தேசப்பற்று உணர்வை மாணவர்கள் மத்தியில் வளர்க்க சுதந்திர தினப் பேரணி மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டன.
மாணவர்களின் தேசப் பற்றை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவும் அவர்களிடையே சுதந்திர தின வரலாற்று சான்றுகளை எளிய முறையில் அவர்களுக்கு புரியும் வண்ணம் வகுப்பு சார் கற்றல்கற்பித்தலில் கொண்டு சேர்க்கும் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக பாலர்பள்ளியின் தோற்றுனரும் தலைமை பொது உறவு அதிகாரியுமான ஜெயசுதா தெரிவித்தார்.
தேசிய பண் பாடலை பாடியவாறு மாணவர்கள் தத்தம் கைகளில் மலேசிய கொடியை ஏந்தியவாறு பாலர் பள்ளியிலிருந்து சுற்று வட்டார பகுதிகளில் பேரணியாக அணிவகுத்து வலம் வந்தனர்.
மேலும் அவர்கள் கைவண்ணங்களில் அலங்கரித்த சுதந்திர தின குடைகள் நிகழ்வுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. இந்த பேரணியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் இணைந்து அணிவகுத்து சென்று துணைநின்றனர்.
மெர்டேகா மெர்டேகா என்ற முழக்கத்துடன் மாணவர்கள் பேரணி முடிவடையும்வரை இடைவிடாத உற்சாகத்துடன் நிகழ்வுக்கு சுதந்திர பற்றை மணம் பரப்பினர் என்று ஜெயசுதா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2025, 6:30 pm
மலேசிய இந்திய டிஜே கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாபெரும் பீட் தலைவன் போட்டி: குணராஜ் அறிவிப்பு
September 9, 2025, 6:04 pm
ஷாரா கைரினாவின் மரணத்திற்கு எச்ஐஇ சிக்கல்களுடன் கூடிய கடுமையான மூளைக் காயமே காரணம்: டாக்டர் பவன்குமார்
September 9, 2025, 6:00 pm
இந்து சமயம், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் நிதி உதவிகள் தொடரும்: சிவநேசன்
September 9, 2025, 1:25 pm
மொஹைதின் குற்றச்சாட்டுகளை MCMC இன்னும் விசாரித்து வருகிறது: டிக் டாக்கின் தகவலுக்காகக் காத்திருக்கிறது
September 9, 2025, 1:19 pm
துன் மகாதீர் சொத்துக்கள் குறித்து எம்ஏசிசி இங்கிலாந்திடம் இருந்து தகவல்களைக் கோரியுள்ளது
September 9, 2025, 1:10 pm