
செய்திகள் மலேசியா
எச்பிஎம் சூராவ்வில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவில் டத்தோ வீரா ஷாகுல் தாவூத்திற்கு மௌலிதுர் ரசூல் விருது வழங்கப்பட்டது
கோலாலம்பூர்:
செந்தூல் எச்பிஎம் சூராவ்வில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவில் டத்தோ வீரா ஷாகுல் தாவூத்திற்கு மௌலிதுர் ரசூல் விருது வழங்கப்பட்டது.
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எச்பிஎம் சூராவ்வின் பேராதரவில் மீலாதுன் நபி விருது விழா விமரிசையாக நடைபெற்றதாக அதன் தலைவர் அப்துல் ஹாலிம் தெரிவித்தார்.
இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் அவரது நபிமொழிகள், வழிகாட்டுதல்கள், புகழ்மாலைகள், சொற்பொழிவுகள் என்று பலவிதமாக நினைவு கூருவார்கள்.
இது நபிகள் நாயகத்தின் மீதுள்ள அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மாதமாகும்.
முஸ்லிம்கள் பெருமானார் பிறந்த நாளில் நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்து, ஒழுக்கங்களையும் உண்மையான வாழ்வையும் பின்பற்றுவதன் மூலம் அவரது பிறந்த
நாளைக் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எச்பிஎம் அமைப்பின் பேராதரவில் மீலாதுன் நபி விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எச்பிஎம் அமைப்பு பாராபட்சம் பாராமல் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் பல சாதனைகளை புரிந்து வரும் டத்தோ வீரா ஷாகுல் தாவூத்திற்கு மௌலிதுர் ரசூல் விருது வழங்கி கௌரவிப்பபட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த விருது விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த உலாமாக்களும் சேவையாளர்களும் மத்ரஸா பிரதிதிகளும் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2025, 6:30 pm
மலேசிய இந்திய டிஜே கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாபெரும் பீட் தலைவன் போட்டி: குணராஜ் அறிவிப்பு
September 9, 2025, 6:04 pm
ஷாரா கைரினாவின் மரணத்திற்கு எச்ஐஇ சிக்கல்களுடன் கூடிய கடுமையான மூளைக் காயமே காரணம்: டாக்டர் பவன்குமார்
September 9, 2025, 6:00 pm
இந்து சமயம், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் நிதி உதவிகள் தொடரும்: சிவநேசன்
September 9, 2025, 1:58 pm
டுரியான் துங்கால் செமாபோக் பெர்டானா பாலர்பள்ளியில் சுதந்திர தினப் பேரணி
September 9, 2025, 1:25 pm
மொஹைதின் குற்றச்சாட்டுகளை MCMC இன்னும் விசாரித்து வருகிறது: டிக் டாக்கின் தகவலுக்காகக் காத்திருக்கிறது
September 9, 2025, 1:19 pm
துன் மகாதீர் சொத்துக்கள் குறித்து எம்ஏசிசி இங்கிலாந்திடம் இருந்து தகவல்களைக் கோரியுள்ளது
September 9, 2025, 1:10 pm