நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்து சமயம், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் நிதி உதவிகள் தொடரும்: சிவநேசன்

ஈப்போ:

பேரா மாநிலத்தில் இந்து சமயம், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மாநில அரசாங்கம்  தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கும்.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் இதனை கூறினார்.

இம்மாநிலத்தில் சில இடங்களில்  தனியார் , அரசாங்க நிலங்களில் உள்ள  அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்கள்  அகற்ற நடவடிக்கை எடுத்து  வருகிறது.

உடைபடும் அபாயத்தைக் எதிர்நோக்கும் ஆலயங்களுக்கு  மாற்று இடங்களை பெற  நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில நேரங்களில ஆலயங்களில  அதற்கு ஆலய பொறுப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

பேரா மாநிலத்தில் தம்முடைய அனுமதியின்றி எந்த ஆலயமும் உடைபடாது. 

அவைகளுக்கு பிரச்சனை எழுந்தால் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று  குறிப்பிட்ட அவர் மாநில இந்து சங்க நடவடிக்கைக்கு 10 ஆயிரம் ரிங்கிட் உதவி வழங்கப்படும் என்றார்.

ஈப்போ மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபுற்ற பேரா மாநில இந்து சங்க 47ஆவது திருமுறை விழாவை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் சிவநேசன் இவ்வாறு பேசினார்

இந்த நிகழ்வை நிறைவு செய்ய பிரதமரின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன்
கலந்துக் கொண்டார்.

அவர் ஆற்றிய உரையில் , சமய வளர்ச்சிக்கு, பிரதமர் இந்து சமய வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதை அவர் சுட்டிக்காட்டிப பேசினார்.

ஈப்போ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற திருமுறை ஓதும்  விழாவில்  760 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் தேர்வுப் பெறும் மாணவர்கள்  தலைநகரில் நடைபெறவிருக்கும் தேசிய நிலை திருமுறை ஓதும் போட்டியில் பங்கேற்பர் என்று மாநில இந்து சங்க தலைவர் தலைவர் பொன்.  சந்திரன்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset