நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீர் சொத்துக்கள் குறித்து எம்ஏசிசி இங்கிலாந்திடம் இருந்து தகவல்களைக் கோரியுள்ளது

புத்ராஜெயா:

துன் டாக்டர் மகாதீர்  சொத்துக்கள் குறித்து எம்ஏசிசி இங்கிலாந்திடம் இருந்து தகவல்களைக் கோரியுள்ளது.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுக்குச் சொந்தமான சொத்துக்கள் குறித்து இங்கிலாந்து அதிகாரிகளிடமிருந்து எம்ஏசிசி விரிவான தகவல்களைக் கோரியுள்ளது.

துன் மகாதீர் மீதான விசாரணை இன்னும் தொடர்கிறது. இதனால் எம்ஏசிசி வெளி தரப்பினரிடமிருந்து விரிவான தகவல்களைக் கோரி வருகிறது.

இதன் அடிப்படையில் தான் எம்ஏசிசி இங்கிலாந்து அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெற்று வருகிறது.

தகவல் எங்களுக்குக் கிடைத்தால், நாங்கள் பின்னர் உங்களுக்குத் தெரிவிப்போம் என்று அவர் இன்று எம்ஏசிசி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset