
செய்திகள் மலேசியா
மலேசிய இந்திய டிஜே கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாபெரும் பீட் தலைவன் போட்டி: குணராஜ் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா:
மலேசிய இந்திய டிஜே கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாபெரும் பீட் தலைவன் எனும் டிஜே போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை அறிவித்தார்.
மலேசியாவில் அதிகமான இந்திய டிஜே கலைஞர்கள் உள்ளனர்.
அதே வேளையில் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்.
இவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பீட் தலைவன் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியை செந்தோசா சட்டமன்ற தொகுதி, அஜெண்டா சூரியா, ரியல் ஜோக்கி, திரினித்தி சொலுஷன் நிறுவனம், செஜாத்ரா செந்தோசா சிலாங்கூர் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டியில் சுமார் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 12 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பரிசுகளும் இப்போட்டியில் காத்து கொண்டிருக்கிறது.
இந்த போட்டிக்கான பதிவு நாளை 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடையும்.
அதனை தொடர்ந்து இம்மாதம் 26ஆம் தேதி முதல் கட்ட தேர்வு நடைப்பெறும்.
இதை தொடர்ந்து அடுத்த மாதம் 5ஆம் தேதி இப்போட்டிக்கான அரையிறுதி சுற்று நடைப்பெறும்.
அடுத்ததாக தீபாவளி கொண்டாட்டம் கலந்து இந்த போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று 15ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கத்தின் வளாகத்தில் நடைப்பெறவுள்ளது.
இசைத்துறையில் இந்திய இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் கூடுதல் வருமானத்தை பெற்றுத் தர இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே டிஜே கலைஞர்கள் திரளாக இப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு குணராஜ் கேட்டுக் கொண்டார்.
இப்போட்டி குறித்த மேல் விவரங்களுக்கு 012-5803605 (மணி போய்), 017-3149462 (ஹார்டி பி) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2025, 6:04 pm
ஷாரா கைரினாவின் மரணத்திற்கு எச்ஐஇ சிக்கல்களுடன் கூடிய கடுமையான மூளைக் காயமே காரணம்: டாக்டர் பவன்குமார்
September 9, 2025, 6:00 pm
இந்து சமயம், ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் நிதி உதவிகள் தொடரும்: சிவநேசன்
September 9, 2025, 1:58 pm
டுரியான் துங்கால் செமாபோக் பெர்டானா பாலர்பள்ளியில் சுதந்திர தினப் பேரணி
September 9, 2025, 1:25 pm
மொஹைதின் குற்றச்சாட்டுகளை MCMC இன்னும் விசாரித்து வருகிறது: டிக் டாக்கின் தகவலுக்காகக் காத்திருக்கிறது
September 9, 2025, 1:19 pm
துன் மகாதீர் சொத்துக்கள் குறித்து எம்ஏசிசி இங்கிலாந்திடம் இருந்து தகவல்களைக் கோரியுள்ளது
September 9, 2025, 1:10 pm